Search

Saved articles

You have not yet added any article to your bookmarks!

Browse articles

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

கடல் குளிர்ந்தாலும் உருகும் ‘பேரழிவு பனிப்பாறை’: விஞ்ஞானிகள் அதிர்ச்சி தகவல்

கடல் குளிர்ந்தாலும் உருகும் ‘பேரழிவு பனிப்பாறை’: விஞ்ஞானிகள் அதிர்ச்சி தகவல்
அண்டார்டிகாவில் வேகமாக அழிந்து வரும் ‘பேரழிவு பனிப்பாறை’

பிரிட்டிஷ் அண்டார்டிக் ஆய்வு நிறுவன விஞ்ஞானிகள், மூன்று வெவ்வேறு கணினி மாதிரிகளைப் பயன்படுத்தி ஆய்வு மேற்கொண்டனர்

பகிரவும் WhatsApp Facebook

அண்டார்டிகாவில் உள்ள ‘பேரழிவு பனிப்பாறை’ என அழைக்கப்படும் துவைட்ஸ் பனிப்பாறை, கடல் நீரின் வெப்பநிலை குறைந்தாலும் அடுத்த 150 ஆண்டுகளுக்குத் தொடர்ந்து பனிக்கட்டிகளை இழக்கும் என்று புதிய ஆய்வில் தெரியவந்துள்ளது. இதனால் உலக அளவில் கடல் மட்டம் உயர்ந்து, கடலோரப் பகுதிகள் பாதிக்கப்படும் அபாயம் அதிகரித்துள்ளது.

மேற்கு அண்டார்டிகாவில் அமைந்துள்ள துவைட்ஸ் பனிப்பாறை, உலகின் மிக அகலமான பனிப்பாறையாகும். புவி வெப்பமயமாதல் காரணமாகக் கடல் நீர் சூடாகி, இந்தப் பனிப்பாறை வேகமாக உருகி வருகிறது. இது முழுமையாக அழிந்தால் உலகக் கடல் மட்டம் சுமார் 65 சென்டிமீட்டர் உயரக்கூடும்.

பிரிட்டிஷ் அண்டார்டிக் ஆய்வு நிறுவன விஞ்ஞானிகள், மூன்று வெவ்வேறு கணினி மாதிரிகளைப் பயன்படுத்தி ஆய்வு மேற்கொண்டனர். அதில் கடல் நீர் குளிர்ந்தால், பனிப்பாறையின் அடிப்பகுதியில் என்ன மாற்றங்கள் நடக்கும் என்பதை ஆராய்ந்தனர்.

ஆய்வில் அருகிலுள்ள பைன் ஐலேண்ட் பனிப்பாறை மீண்டும் வளரத் தொடங்கியது. ஆனால், துவைட்ஸ் பனிப்பாறை தொடர்ந்து பனிக்கட்டிகளை இழந்தது. அதன் இழப்பு வேகம் படிப்படியாகக் குறைந்தாலும், 150 ஆண்டுகளுக்கு நீடிக்கும் என்பது தெரிய வந்தது. கடந்த காலங்களில் கடல் வெப்பநிலை அதிகரித்ததால் ஏற்பட்ட பாதிப்புகள், இப்போதும் பனிப்பாறையின் பின்னடைவுக்குக் காரணமாக இருப்பதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த ஆய்வு முடிவுகள் ‘ஜியோபிசிக்கல் ரிசர்ச் லெட்டர்ஸ்’ அறிவியல் இதழில் வெளியாகியுள்ளன. கடல் நீரைக் குளிர்விப்பதால் மட்டும் பனிப்பாறையைப் பழைய நிலைக்குக் கொண்டுவர முடியாது. எனவே, பசுமைக்குடில் வாயு வெளியேற்றத்தைக் குறைப்பதுடன், எதிர்காலக் கடல் மட்ட உயர்வை எதிர்கொள்ளவும் உலக நாடுகள் தயாராக வேண்டும் என்று விஞ்ஞானிகள் வலியுறுத்தியுள்ளனர்.


முந்தைய செய்தி
Russian drone strikes in Black Sea to test NATO's response
அடுத்த செய்தி
CM Vijay to inaugurate mega science centre in Coimbatore

தொடர்புடைய செய்திகள்